நான் தப்பித்தேன்...
அந்த நிலவொளியில்
வெள்ளை மயில்
தோகை விரித்ததுவாய்
மனம் திறந்து
விரும்புகின்றேன் எனச் சொன்னாள்
திருவிழக் கூட்டமொன்றில்...
திகைத்தேன்,
திக்கித்தேன்,
தித்தித்தேன்,
சிரித்தேன்,
சிந்தித்தேன்,
என்னை மறந்தேன்,
கனவில் மிதந்தேன்,
துள்ளிக் குதித்தேன்,
அவளோ..!
உள்ளம் வரைந்த ஓவியத்தை
உற்றுப் பார்த்துவிட்டு
நீட்டினாள் காதல் ஓலை,
நண்பனிடம் கொடுக்கச் சொல்லி.
வெந்தேன்,
துடித்தேன்,
அழுதேன்,
மறக்க நினைத்தேன்,
மனதை உடைத்தேன்,
மெல்ல இறந்தேன்,
உயிரைப் பிழிந்தேன்.
எதிர்முனையில் நணபன்..
வேண்டாமெனக் கிழித்தெறிந்தான்
அவள்
விவாகரத்து செய்தவளென்று.