புறப்படு முன்னேற புறப்படு
தோழா !புறப்படு முன்னேற
புறப்படு வாழ்வில் உள்ள
தடைகளை உடைத்து
முன்னேற புறப்படு!களையெடு
மனதிலே வளரும் தீய
எண்ணங்களை களையெடு!
உனக்கான லட்சிய பாதையில்
கற்களும் உண்டு
முட்களும் உண்டு தயங்கியே
நிற்காதே!அதனை கடந்து
சென்றால்தான் லட்சியத்தை
அடைய முடியும் மறவாதே.
உறக்கத்தை தள்ளிப்போடு
உழைப்பை கையிலெடு
வேர்வை சிந்த பாடுபடு
வெற்றி உனக்கே நீ கொண்டாடு
படித்த அறிவை நீ கொண்டு
வெற்றி படிக்கட்டு பல
ஏறு மேற்கொண்டு வாழ்க்கையை வளமாக்கு
நல் வண்ணங்கொண்டு.