நொறுங்கிப் போனேன்

உள்ளே பார்க்க முடிவில்லாமல் இருந்தது.
நான் நொறுங்கிப் போனேன்.
எனக்கு தெரியாமலே, வேதனையற்ற பெயரிடப்படாத வெறுப்பு.

மறுமலர்ச்சி பற்றிய வீணான கேள்விகள்.
ஒரு தோல்வியுற்ற சூரியனின் ஒரு மங்கலான விடியல் சந்திரனாய்!

இரண்டு மலைகளுக்கு இடையே ஒரு நதி போர்!
இயந்திர நரம்பணுக்களைக் கேட்கும் நேரம், ஏன் இரவு முடிவடைந்தது?

தனிமைப் பாதையில் சிறுவனின் எழுத்துகளுக்குள் என்ன இருக்கப் போகிறது?

ஓங்காரம் ஓதிய நாவிக்கமலந்தனில் ஓயாத ஓவ்வாத வார்த்தைகளும் கீர்த்தனைகளாய் பாடும் மனிதர்களுக்கு இடையே தேடிய சீவகாருண்ய ஒழுக்கம் எங்கும் தென்படவில்லை.

கன நேரந்தனில் காரணமின்றி பல கோடி உயிர்களும் துன்புற வியாக்கியானங்களைப் பேசிக் கொண்டு நானும் பொழுதைக் கழிப்பேனோ?

எந்நொடி என்ன நிகழும் என்பதை அறிந்து உரைப்பவர் தேடி சூரியனிடம் நான் யாரென்று கேட்கிறேன்?
அவனும் மௌனமாய் தோல்வியுற மங்கலான ஒளியுடை சந்திரனிடம் கேட்க அவனும் மௌனமாய் தோல்வியுற இரவும் பகலும் கேள்வி இடையாறாது கணைகளாகிட அச்சமுற்ற சந்திரனும் அமாவாசையன்று ஓடி ஒளிந்திட பெருவெளி இருளில் மிதந்திருக்கும் நட்சத்திரங்களிடம் விசாரணை தொடங்கி இம்சிக்கிறேன் ஈறிலியானவனை ஈறிலியாய் குழந்தை போலே..

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (22-Dec-17, 8:12 am)
Tanglish : norunkip poanen
பார்வை : 1338

மேலே