என் ஆசை குருவம்மா
உன் லோலாக்கில்
என் ஆழாக்கு மனசை
சிக்க வைத்தாய்..
உன் கன்னத்தின்
கோடுகள் புலோகத்தின்
வகுடுகளை விட நீளமானது..
பிரபஞ்ச அழகிகளின்
சிரிப்பைவிட
உன் பொக்கவாய்
புன்னகையில்
என் கதர் சட்டை தாத்தா
சிலிர்த்து போவார்!
நீ வைக்கும் நாட்டு கோழி
வறுவலுக்கு
என் நுனி நாக்கு
நள்ளிரவு வரை
சப்பு கொட்டுமடி!
என் நெடுந்தூர உறக்கத்தில்
உன் நினைவலைகள்
வாசம் செய்கின்றன
மிண்டும் என் மகளாய்
ஜெனிக்க வேண்டும்...
என் ஆசை குருவம்மா!!