என்னவளே பூவே
வட்ட வட்ட உந்தன்
சிவந்த முகத்தில் நீ
எந்தன் தாமரைப் பூ
உதிர்க்கும் சிரிப்பில் நீ,
எந்தன் முல்லைப் பூ
என்மேல் காதல் பொழியும்
உந்தன் இதயம் என்றும்
நான் விரும்பும் ரோசாப் பூ
பெண்மையில் உன் மென்மை
தெய்வமணம் தரும் மல்லிகைப் பூ
இப்படித்தான் என் மனதில்
பூப் பூவாய் பூத்து மணக்கின்றாய்
என்னவளே நீ என்றும் என்னை
ஆள வந்த மகிழம் பூ