மாதங்களில் நான் மார்கழி

மார்கழிப் பூக்களே கண்ணன் மலரடியில்
கூர்விழி கோதையர் அன்பில் அருச்சிக்க
தார்த்துளாய் மார்பில் ஒளிர்ந்திடும் கண்ணனும்
மார்கழி யாகிநின் றான் .

ஒரு விகற்ப இன்னிசை வெண்பா .


கவிக்குறிப்பு :
தார் = மாலை ; துளாய் = துளசி
தார்த்துளாய் = துளசி மாலை .

மாதங்களில் நான் மார்கழி ஆவேன் என்று கீதையில் சொன்னான் கண்ணன் .

ஓ மார்கழிப் பூக்களே ! கூர்விழி கோதையர்கள் கண்ணன் காலடியில்
அன்பினால் மலர் கொண்டு அருச்சிக்க ஒளிரும் திருத்துளாய் மாலை மார்பிலே
அணிந்த கண்ணனும் மார்கழியாகவே நின்றான் என்பது பொருள் .

எழுதியவர் : கவின் சாரலன் (26-Dec-17, 1:56 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 127

மேலே