தமிழ்நா தையர்

திசையிலா அடங்கா தமிழை திசையெங்கிலும்
பரவிடச் செய்தநா தையர்..!
கொக்கிகள் இலா தமிழை
அச்சுக் கோர்த்தநா தையர்..!
சுவடிகள் ஏறியச் செந்தமிழை
ஏடுகள் ஏற்றியநா தையர்..!
அறநெறி நூல்களைப் பாடநூலென
தொகுத்திட்டநா தையர்..!
என் தமிழுக்கு இத்துனைத் தொண்டாற்றிய
கோநா தையர்க்கு..!
என்தாழ் வணக்கம்..!