உண்மை உணர்க

உண்மை உணர்க...

காலம் சொல்லும் பாடமெல்லாம் உண்மை என உணர்க...

தேவையாய் நட்பைத் தேடுவதால், உறவுகள் தேவையற்றதாகிவிடாது...

அம்மாவைப்போல் அப்பாவைப்போல் ஆயிரம்பேரைக் கண்டாலும் , யாருக்கு முதலிடம் என்பதில் கவனம் தேவை...

நடப்பது மட்டுமே நிஜமே தவிர, நாளை என்பது பயமே...

கனவுகள் தொலையாதிருக்க பாரபட்சமில்லாமல், அனைவரையும் உண்மையாக நேசி...

மரியாதை என்பதை அனைவரிடமும் எதிர்பார்ப்பது உன்னை ஏமாற்றும்...

கேமராக்கள்முன் சிரிக்கும் முகங்கள் ஏனோ, மனிதர்கள் முகம்பார்க்க அந்தஸ்தைத் தேடுகிறது...

காரணம் கண்டறிவதே சில அறிவுஜீவிகளின் அசாத்திய திறமையாய் இருக்கிறது...

உணர்வுகளை மதிக்கவில்லையென கொடிபிடிக்கும் அதேநேரம், அடுத்தவர் உணர்வுகளை உதாசீனம் செய்வது இன்றைய மிகச்சிறந்த பொழுதுபோக்கு...

உன் இயலாமையை உணர்த்திக்காட்டும் அவதாரங்கள் அநேகர் உண்டு...

சொல்வதெல்லாம் குற்றம் என்பதே இயல்பாக வெற்றியை அடைகிறது...

நீ ஏன் பணக்கண்ணாடி அணியவில்லை என்பதே உன்னை தகுதிநீக்கம் செய்கிறது...

உன்னைக் குறித்து வெட்கமடைவோரிடம் போய் யார் சொல்ல உங்கள் நினைவுகள் தவறு என்று...

உன்னை வெறுப்போரிடம் எத்தனை முறை தோற்கப் போகிறாய்? வாழ்நாள் முழுவதும் என்பது உன் நேசத்தின் எல்லை...

எல்லா சூழ்நிலையிலும் கடவுள் திட்டம் என்ன? என பொறுத்திரு; அவர் யாரைத்தான் கைவிட்டிருக்கிறார்...

எழுதியவர் : ஜான் (27-Dec-17, 5:36 am)
பார்வை : 408

மேலே