மாறுமோ என் நிலை
நாட்கள் நகர்கிறது, என் நிலை அறியாது.
துரத்திஓடி நிற்கிறேன், தொட ஏனோ இயலாது.
எதற்கு இந்த ஆட்டம், இழந்த பின்னும் ஓட்டம்.
என் இன்னல்கள் தீர்க்கத் தானே இப் போராட்டம்.
வாழ்கிற நொடியில், வறுமை பிடியில் வாடுகிறேன்.
அழுதே நானும் இறைவனடி தேடுகிறேன்.
முடிவிலி போல தீராத என் சோகம்.
தீர்வை தேடி நானும் கடக்கிறேன் காலம்.
தீருமோ மனக்கவலை?
என்று மாறுமோ என் நிலை?