ஆசைகள்

ஆசைகள்
****************
கருத்த வானவெளியிலே
கண்சிமிட்டும் நட்சத்திரம்
மௌனமான நேரத்திலே
காதில் விழும் குழலோசை
பன்னீராய் மழைத்துளி
படிப்படியாய் இடியோசை
சுட சுட வடை பஜ்ஜி
சிரித்து பேச நண்பர் கூட்டம்
சிறப்பாக மேலும் ஒன்று
என் அன்னை ஸ்பரிசம்
கிடைத்துவிட்டால்
எதுவும் இங்கே தேவை இல்லை

எழுதியவர் : ஸ்ரீமதி (27-Dec-17, 5:33 pm)
Tanglish : aasaikal
பார்வை : 775

மேலே