உனக்காய் என் மாற்றங்கள்

எதை சொன்னாலும் கோபித்து கொள்கிறாய்
எதை உன்னிடம் சொல்லலாம் என்று யோசிக்கிறேன்
உன்னை வெறுத்து இல்லை
உன்னை வெறுத்துவிடாமல் இருக்கவே
உண்மை சொன்னால் பொய் என்கிறாய்
எனினும் உன்னிடம் பொய் சொல்ல விரும்பவில்லை
காரணம் நான் உன்னை பொய்யாய் விரும்பவில்லை
என்னை விட்டு விடு என்றாய் விட்டு விட்டேன்
உன்னை அல்ல உன்னை இப்டி சொல்ல வைத்த என் செயலை
என்னை நீ நேசிக்கிறாய் என எனக்கு தெரியும்
நான் உனக்காய் என்னை மாற்றி கொள்கிறேன்
என யோசிக்கிறாயா என்பதே எனக்கு தெரிய வேண்டும்

எழுதியவர் : டேவிட் ஸ்ரீ (27-Dec-17, 5:58 pm)
பார்வை : 806

மேலே