ஏன்ஏன்
அரும்பு மலராகும் ஓசையை
அறிந்தாய் நீ மட்டும் காற்றே,
அதை நானறியும் ஆசையை..
மட்டும் ஏற்க மறந்தாய் நேற்றே...
அதிகாலையில் களவாடுகிறாய் பனித்துளியை
மறக்காமல் தினந்தோறும் கதிரொளியே..
அதனால் விழும் கண்ணீர்த்துளியை
மட்டும் துடைக்க மறந்தாய் பேரொளியே!
வளர்ந்தாலும் எட்டாது நீலவானம்
நின்றதோ மலைத்து மலை?
அளவெடுக்க. தோற்றதால் நீண்ட. மௌனம்...
மறந்தாய் கலைக்க மனதில் கவலை!
காற்றும் கதிரும் மலையும்...
சலிக்காதே! தினமும் மனமும் அலையும்...
வார்த்தை தனை தமிழில் தேடித்தேடி...
வராததேன் கவிதையே? எழுத்தில் கூடிக்கூடி!!