ஒற்றைச் சிறகோடு
சின்னஞ்சிறு கோடாய் பறந்து திரிந்த கூட்டம்
தங்கள் சிறுகூட்டில் கொஞ்சிக் கிடந்த கூட்டம்
துன்பம் வரும்போது சேர்ந்து எதிர்த்தக் கூட்டம்
இன்றோ வாடும்படியாய் என்ன நடந்தது கூறீர்?
உயரம் கண்டு பயம் கொண்டது இல்லை
துயரம் கண்டு துயர் கொண்டது இல்லை
சிகரம் தொடவும் துணிந்து சென்றது உண்டு
மரங்கள் ஏதுமின்றி எங்கள் வாழ்வு இல்லை
சிறகு இருக்க வானம் தொட்டே விளையாடுவோம்
ஓரிறகு விழுந்தாலும் கவலை விட்டே சதிராடுவோம்
விறகுத் தேவைக்கு காய்ந்ததை எடுத்த காலம்போய்
வியாபாரத் தேவைக்கு மரங்கள் வெட்ட அதிர்ச்சியானோம்
நாட்டுக்குள் கடப்பாரை தீட்டியவரை கூட தவறுதான்
காட்டுக்குள் இருப்போரை தீண்டினால் என்ன செய்வது
எங்களது மறுசிறகான மரங்கள் குறையக் குறைய
ஒற்றைச் சிறகு வெட்டப்பட்டதாகவே உணர்ந்து கொள்கிறோம்
இந்த ஒற்றைச் சிறகு கொண்டு பறப்பதெப்படி
மரமே இல்லா உலகமென்ற நினைவே தப்படி
கரத்தில் அரிவாள் விட்டு விதைகள் தொட்டால்
தரத்தில் உயர்வான் மனிதன் செவி சாய்ப்பானா?