வெயில்
வெயில்
========
வெப்பத்தால் அனைவரையும்
துவைத்து காயப்போடும்
வெயில்
==========================
துணிகள் சீக்கிரம் உலரல்
மனிதர்கள் தூக்கத்தில் உலறல்
வெயில்
===========================
மொட்டையாய் மரங்கள்
வறட்சியாய் குளங்கள்
வெயில்
===========================
சாலைக்குச் சூடு
காலணியில்லையா ஓடு
வெயில்
===========================
கலைக்கும் அலங்காரம்
முகமாகும் விகாரம்
வெயில்
===========================
அடிக்கடி அழுக்காகும்
உடையில் வெண்சாயம் பூசும்
வெயில்
============================
நிலங்களை வெடிக்கவைக்கும்
மக்களைத் துடிக்கவைக்கும்
வெயில்
============================
காலையில் புன்னகைக்கும்
மதியத்தில் புண்ணாய் ஆக்கும்
வெயில்
============================
பதார்த்தங்கள் சீக்கிரம் கெடும்
பானங்கள் சீக்கிரம் தீரும்
வெயில்
=============================
பானைக்கு மதிப்பு
வீட்டில் சேனைகள் ஆர்ப்பரிப்பு
வெயில்
=============================
கொசுக்களும் எறும்புக்களும் ஆடும்
பூக்களும் மழலைகளும் வாடும்
வெயில்
==============================
தினமும் வரும்
கோடையில் அதிக சினமாய் வரும்
வெயில்
==============================
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
