போராடு மனமே

போராடும் மனமே இரும்பையும் உடைக்கும்
போராடும் மனமே கருங்கல்லைத் துளைக்கும்
போராடும் மனமே எவரெஸ்ட் எட்டும்
போராடும் மனமே வாழ்வில் சிறக்கும்

சிறு துன்பத்துக்கும் துவண்டே விழுந்தால்
சிறு முள்ளுக்கும் துணுக்குற்று அழுதால்
சிறு சொல்லுக்கும் வஞ்சம் வளர்த்தால்
சிறு வாழ்வென்றும் சிறப்பைத் தராது

எதிர்க்க எதிர்க்கவே எதிரி ஓடுவான்
எதிர்த்த விதையன்றோ விருட்சம் ஆகிடும்
எதிர்த்த மலையன்றோ மழையைக் கொடுத்திடும்
எதிர்த்த எவருக்கும் நேர்மையெனில் வெற்றியே..

மனிதன் வாழ்வினில் தினம்தினமும் போராட்டம்
மனிதன் மனதிற்கும் அதைவைத்தே முன்னோட்டம்
மனிதன் வருந்திட வாழ்வாகும் தள்ளாட்டம்
மனிதன் ஜெயித்திட வாழ்வென்றும் தேரோட்டம்

எழுதியவர் : Velanganni A (28-Dec-17, 6:13 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : poraadu maname
பார்வை : 134

மேலே