முட்டுக்கட்டை
சாதிக்க நினைக்கும் சகமனிதருக்கு
போதிக்க ஆயிரம் பேர்களுண்டு
வீதிக்கு வந்திட்ட மக்களுக்கெல்லாம்
உதவிடும் பேர்கள் வேண்டுமிங்கு
லட்சியக் கனவினைத் தொடநினைப்போருக்கு
அலட்சியம் செய்யா உறவுவேண்டும்
நிச்சயம் அவரினை மதித்திடும்போது
வெற்றியின் கனிதனை பறித்திடுவார்
எதற்கெடுத்தாலும் குறைகளைச் சொல்லி
செய்யும் செயலிலெல்லாம் தவறுகள்சொல்லி
முதல்படி வைக்கும்முன் முடித்துவைத்தல்
தவறினும் தவறு திருந்திடுங்கள்
பணம்காசு ஏதும் அவருக்குவேண்டாம்
தடுக்காமல் இருந்தால் அதுவேநலம்
குணமுள்ள மனிதர் ஒருவரேனும்
இச்செயலில் ஈடுபாடு காட்டமாட்டார்
உயர்ந்திட நினைப்போரை தூக்கிவிடவேண்டாம்
தள்ளாமல் இருந்திட்டால் அதுவேபோதும்
அயராமல் உழைப்போருக்கு ஆறுதல்வேண்டாம்
அவச்சொற்கள் சொல்லாமல் இருந்தால்போதும்