நள்ளிரவு நந்தவனம்
வெண்மேகங்களை
மெல்ல மெல்ல களவாடியது
இரவு
சூரியனை பூமிக்குள்
பத்திரமாய் மறைத்து வைத்தது
இரவு
மறைந்திருந்த நட்சத்திரங்களை
ஒவ்வொன்றாய் பிறக்க வைத்தது
இரவு
நிலவென்னும் புதுப்பெண்ணை
பிரபஞ்ச அழகியாக்கியது
இரவு
பூமியை அமைதியாக்க
பறவைகளை தூங்கவைத்தது
இரவு
காற்றை சாந்தப்படுத்தி
சத்தத்தை கட்டுப்படுத்தியது
இரவு
கருவண்ணத் தலையில்
பொன்பூக்களைச் சூடியிருந்தது
வானம்
நிலவு நட்சத்திரத்தின் விளையாட்டை
ரசித்த வண்ணமிருந்தது
வானம்
பூமியெங்கும் பார்த்தபடி
தூங்காமல் விழித்திருந்தது
வானம்
கடலின் சத்தம் கண்டும்
பயப்படாமல் சிரித்திருந்தது
வானம்
கவிஞன் தூரிகைக்கு
கவிதை ஓவியம் கொடுத்தது
வானம்
இரவின் பிரிவில்
பனிரெண்டு மணி நேரம்
எங்கோ ஓடி ஒளிந்து கொண்டது
நட்சத்திரங்கள்