பச்சை உடுத்திய காடு
தரையைத் தொட எண்ணி
தோற்றுக் கொண்டிருந்தது
சூரியன்
நிழல் வண்ணம் பூசி
வெளிச்சப் புள்ளியாய் காட்சியளித்தது
காடு
வானைத் தொட எண்ணி
மேகம் தொட்டன
மரங்கள்
பறவைகளின் மொழி கேட்டு
பரவசமாய் தலையாட்டியபடி
மரங்கள்
உதிர்ந்த இலைகளால்
மெத்தை அமைத்திருந்தது
காடு
விலங்குகளுக்கும் பயம் கொடுத்தது
நல்லிரவில் உறங்கிய காட்டின்
அமைதி