வார்த்தை விளையாட்டு

வார்த்தைகளை கோர்த்தால் தமிழ்மாலை சூடலாம்
வியர்வை சிந்தினால் உயர்வை சந்திப்போம்

முயற்சி செய்யும் முன்னர் பயிற்சி எடுத்தல் வேண்டும் ஆகினும் பயில முயல வேண்டுமே

முயலும் ஆமையும் முயலாமை முடங்கி கிடங்கிருந்தால் முதலை அடைந்திருக்க வாய்ப்பு இல்லை

முதலில் முதலை நீரில்மரக் கட்டைபோல்
மிதந்தாலும் நீர்குடித்தால் மாட்டும் மாடு

மாட்டிய காலை பிடுங்கினால் அந்தகுடல்
தோட்டியை போலத் தொங்கும்

அந்தகுடல் தந்த பல்லோடு மல்லுக்கு ஆயத்தமாகிக் யானை தந்தப்பல்

எழுதியவர் : குருந்தமிழ் (30-Dec-17, 6:34 am)
சேர்த்தது : gurutamil
பார்வை : 130

மேலே