மரபுக் கவிதைகள்
தமிழின் இலக்கணம் தாங்கி வந்ததும்
தமிழின் பெருமைகள் சுமந்து வந்ததும்
தமிழின் வரலாற்றைத் தெரிய தந்ததும்
தமிழின் புலவர்களை அறியத் தந்ததும்
தமிழின் காவியங்கள் நிறையக் கொண்டதும்
தமிழ் இருக்கும்வரை இருக்கப் போவதும்
தமிழ் படிப்போரினை கவர்ந்து நிற்பதும்
தமிழ் பிடித்தோருக்கு சுவையைக் கொடுப்பதும்
தமிழைத் தமிழாக மதித்து நின்றதும்
தமிழை முழுதாக முற்றும் அறிந்ததும்
தமிழைக் கற்றோரையும் வாழ வைத்ததும்
தமிழ் அறிஞர்களை வணங்க வைத்ததும்
வரலாற்றில் நீங்கா இடம் பெறுபவை
மரபுக் கவிதைகள் மாத்திரம் தானே
நம் வரலாற்றை நமக்குச் சொன்னவை
மரபுக் கவிதைகள் மட்டும் தானே