காமதல்

காற்றில்லாத் தனிமை
காரணமில்லாப் புன்னகை
காதல் வழியும் கண்கள்
காவல் போடா கைகள் இடைவெளியில்லா நெருக்கம்
இடைஞ்சலில்லா இதயத்துடிப்பு
இமைக்க மறந்த இமைகள்
இயக்கம் துறந்த இறைகள்
வியர்வைகளில்லா கதகதப்பு
விடியலில்லா இரவுகள்
விஞ்ஞானம் சொல்லா விசைகள்
வினோதம் குறையா இசைகள்
தடைகள் சொல்லா உதடுகள்
தறிகெட்டு ஓடா எண்ணம்
தன்னிலை மறக்கும் நிலை
தரணியில் இது இல்லையேல் பிழை
தாமதமாய் விளங்கும் யுத்தம்
தானமாய்க் கிடைக்கும் எச்சில் முத்தம்
தாகத்தில் காதல் மூழ்கும் நித்தம்
காமத்தின் மீறல்தனைக் காதல் காக்கும்
காதலின் உச்சம்தனைக் காதல் ஏற்கும்
காமத்தில் காதல் எப்போதாவது தோற்கும்
காதலில் காமம் எப்போதும் தோற்கும்

எழுதியவர் : ஜெகன் (30-Dec-17, 1:17 pm)
பார்வை : 170

மேலே