மௌனம் கலையட்டும்

மௌனம்
சிறந்த மொழி தான்.....
உன்னில் என்னை பார்க்கும்
முன் வரை .....
அடி பெண்ணே ....
மௌனமாய் பார்க்கிறாய் ....
மௌனமாய் சிரிக்கிறாய் ....
மௌனமாய் அழைக்கிறாய் .......
உன் விழிகளுக்குள்
விடை தேட சொல்கிறாய் !!.....
என் இதயம் தவமிருக்கிறது
நின்
பூவிதழ் திறந்து
ஓர் மொழி கேட்க ......
வார்த்தைகள் வெளிப்படுத்தட்டும்
நம் காதலின் ஆழத்தை
விட்டுவிடு ......
இரக்கப்பட்டு திறந்து வை
இதயத்தின் இதழ்களை !!!....
விலங்கிட்டு புதைத்து வை
நின் மௌனத்தின்
கதவுகளை !!....

எழுதியவர் : நிஷா (30-Dec-17, 1:01 pm)
சேர்த்தது : Nishu
பார்வை : 168

மேலே