பகல் பத்து பதிகம் 6
பதிகம் 6
வசீகரங்கள்
வசந்தத்தை மட்டுமே
பரிசளிக்குமா?
கற்பனைகளும், ஒப்பனைகளும்
கவித்துவத்தில் மட்டுமே
கால் ஊன்றுமா?
தேவர்கள் பூச்சொரியலாம்.
அசுரர்களின் கைகள்
வேடிக்கை பார்க்குமா?
மௌனம் சம்மதந்தானா?
மறைந்து கொள்ளல் ஆகாதா?
வாழ்வின் நீளத்தை விடவும்
காதலின் ஆழம் பெரிதல்லவா?
பருவம் தப்புத்தப்பாய்
பதில் தருகிறது.
ஒளியின் வேகத்தில்
கண்கள் கூசி
பார்வைக் குறைபாடு.