என் கள்வனே

நீ என் கருவறையில் சிறு பூவாய் மலர்ந்த பொழுதே
என் விழிகளில் இமையாய் இருந்த
என் உள்ளத்தில் உறவாடிக் கொண்டிருந்த
என் இதயத்தை என்னை அறியாமலே களவு செய்த
என் ஆருயிா் கள்வன் என்னை தனியாக தவிக்க விட்டு
கண் காணாத காற்றுடன் கலந்து விட்டான்
பிரியும் தருணத்தில் கூட அவன் களவு செய்த என் உயிர்
அவன் வடிவத்தில் என்னுள் வசிப்பதை அறியாமலே சென்று விட்டான்
தாய் தந்தையற்ற எனக்கு ஒரு தாயாகவும் தந்தையாகவும் இருந்த என் கள்வன்
இன்று என்னை தனியாக தவிக்கவிட்டு எங்கோ சென்று விட்டான்
என் விழிகள் என்னவரை இறுதியாக ஓருமுறை காணவேண்டுமென துடித்தன ஆனால்
அமுதம் போன்ற அன்பான அந்த முகம் மீண்டும் காணும் வாய்ப்பு பெறாமலேயே அகன்று விட்டது
என் விழிகளில் வழிந்தோடும் ஒவ்வொரு துளி கண்ணீரிலும்
கானல் நீரைப்போல அவர் முகம் தொிந்து கொண்டிருக்கிறது
ஈரைந்து மாதங்கள் உனக்காக நான் வாழ்ந்தேன்
இன்று என் விழிகளில் வழியும் கண்ணீாின் காரணம் என்னவென
நீ வினாவுவதை உன் பிஞ்சு விழிகளால் புாிந்து கொண்டு
நான் இதை உரைக்கிறேன் என் கள்வனே ......
- சஜூ

எழுதியவர் : சஜூ (31-Dec-17, 8:24 am)
சேர்த்தது : சஜூ
Tanglish : en kalvane
பார்வை : 135

மேலே