பெண்ணே உன் சூட்சுமம் தான் என்ன

நினைக்கையில் நெஞ்சில் எறும்பாய்
ஊரும் உன் ஞ்சாபகங்கள்
ஒருமுறை மரத்தில் பழுத்த மாங்கனி
போல் வந்து ருசி தட்டுகிறாய்
மறுமுறை நாவில் ஊறும் கற்கண்டாய்
மாறி ரஸஜாலம் புரிகிறாய்

உன்னை வார்த்தைகளில் வடிக்க
துடியாய்த் துடிக்கிறது என் மனம்
கவித் தழைகளுக்குள் சிக்காமல்
என்னைத் கலங்க வைப்பதில் உனக்கு என்ன லாபம்?
ஒற்றைப் பார்வையில் இனிக்கிறாய்
ரெட்டைப் பார்வையில் பழரசமாய் மாறி
என் நினைவில் பல்சுவைப் பானம் பிழிகிறாய்
பெண்ணே! என்ன சூட்சுமம் தான் உள்ளது உன்னில்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (31-Dec-17, 11:56 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 159

மேலே