தொடரும் என் நேசம்

கணநேரத்துக்குள் கண்ணிமைக்குமுன் களவாடிய கள்ளியே
சத்தமில்லாமல் சொல்லாமாலெடுத்த மனசதான் அள்ளியே
தொண்டைக்குள் தண்ணியிறங்காமல் தவித்தே கிடக்கிறேன்
தண்டனைக்குள் மாட்டிக்கொண்ட கைதியாய் தவிக்கிறேன்

என்னச்செய்த என்னையவிளங்கிற மாதிரி சொல்லிவிடு
எதுசெய்த மயக்கிசாய்த்து வீழ்த்தி போனாய்நீ
மதுகுடித்த குடிகாரனாகி தள்ளாடி யாடுதுமனசு
இதுபுரியாமல் பறக்கத்தான் தொடங்குது மனசு

பின்னல்அறியாத உன்கூந்தல்கொத்து மேய்ந்து திரிகிறது
ஜன்னலில்லாவீடு போலவெம்பி எழும்புகிறது ஆசைகள்
கன்னமதுகன்னமது ஆப்பிள்போன்என பளபளக்குது பளீரென
எண்ணமது எண்ணமது செல்போன்கோபுரமென எழுந்து தேடுதுனை

தாவணிநீ மறந்தாலும் துப்பட்டாஒட்டிக்கொண்ட சுடிதார் தேவதையே
தாடியோடு நானும்தான் நிழலாய்ஒட்டிக்கொண்டேன் துப்பட்டா பின்னாலே
உந்தன்புடைவை முந்தனைப்பற்றிய மணியெனஉடன் வந்திடவே ஆசையே
ஜீன்ஸோடுநீயும் நின்றால்சிறு பெல்ட்டெனஉன்னை சுற்றிடவும் தோன்றுகிறதே

அசால்டாக அலைபேசியில் அதிரபேசி சிரிக்கும் உன்பேச்சு சத்தம்
அங்கேவந்த நானுனைஉறுத்து பார்க்க நீஉதிர்த்த வெட்கம் மட்டும்
காலங்கள்மாறி கலியுலகமாகியும் விடாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் வெட்கமும்
காந்தள்உன்னை கனவுகளோடும் கவிதைகளோடும் தொடரும் என்நேசம்

எழுதியவர் : யாழினி வளன் (2-Jan-18, 3:26 am)
பார்வை : 230

மேலே