இதை வாசிக்க வேண்டாம்

வாப்பா அடிபட்டு
ஆஸ்பத்திரியில்
படுத்த படுக்கையா
கிடக்கையில்
அஞ்சிக்கும் பத்துக்கும்
அடுத்தவர்களிடம்
கையேந்தாமல்
தான்
பட்டினி கிடந்தாலும்
பரவாயில்லைன்னு
பக்கத்தூட்டுல
பாத்திரம் கழுவி
பச்சரிசிச் சோறும்
தேங்காய்ச் சம்பலும்
செய்து தந்தாயே..
மரணிக்கும் வரை
மறக்கமாட்டேன் தாயே !
5 May 2017 at 22:01

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (4-Jan-18, 12:26 am)
பார்வை : 1089

மேலே