முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்

வாங்க மாப்பிள்ளை வாங்க (1984) திரைப்படத்தில் சங்கர் – கணேஷ் இசையமைப்பில் பாடகர் TKS.நடராஜன் பாடிய ஒரு அருமையான தெம்மாங்குப் பாடல். யு ட்யூபில் கேட்கலாம். உடன் சேர்ந்து நாமும் பாடலாம்.

முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்

கட்ட புள்ள குட்ட புள்ள கருகமணி போட்ட புள்ள
நாக்கு செவந்த புள்ள கண்ணம்மா – இனி
நாந்தான்டி ஓம் புருசன் பொன்னம்மா

மாடு ரெண்டும் மதுரை வெள்ளை மணிகள் ரெண்டும் தஞ்சாவூரு
மாடு ரெண்டும் மதுரை வெள்ளை மணிகள் ரெண்டும் தஞ்சாவூரு
குட்டி ரெண்டும் கும்பகோணம் கண்ணம்மா – அது
கூடுதடி சாலைபாதை பொன்னம்மா (என்னடி)

குத்தால அருவியிலே குளிச்சாலும் அடங்காது
குத்தால அருவியிலே குளிச்சாலும் அடங்காது
அத்தானின் ஒடம்பு சூடு கண்ணம்மா – நீ
அருகில் வந்தா ஜிலுஜிலுக்கும் பொன்னம்மா (என்னடி)

பச்சரிசிப் பல்லலழகி பால் போல சொல்லழகி
பச்சரிசிப் பல்லலழகி பசுப் பால் போல சொல்லழகி
சின்ன இடையழகி கண்ணம்மா – நீ
சிரிச்சாலே முத்துதிரும் பொன்னம்மா (என்னடி)

கண்டாங்கி பொடவ கட்டி கை நெறைய கொசுவம் வச்சு
கண்டாங்கி பொடவ கட்டி கை நெறைய கொசுவம் வச்சு
இடுப்புல சொருகிறியே கண்ணம்மா = அது
கொசுவமல்ல எம் மனசு பொன்னம்மா (என்னடி)

ஏரிக்கரை ஓரத்திலே ஏத்தம் எறைக்கையிலே
ஏரிக்கரை ஓரத்திலே ஏத்தம் எறைக்கையிலே
இங்கிருந்து பாக்கையிலே கண்ணம்மா – நான்
எங்கேயோ போறேனடி பொன்னம்மா (என்னடி)

மழையில நனையும்போது மாந்தோப்பில் ஒதுங்கும்போது
மழையில நனையும்போது மாந்தோப்பில் ஒதுங்கும்போது
மெல்ல அணைக்கும்போது கண்ணம்மா – உன்
மேனி நடுங்கலாமோ பொன்னம்மா (என்னடி)

ஒன்னழக மறச்சிருக்கும் ஒசந்த வெல ரவிக்கத் துணி
ஒன்னழக மறச்சிருக்கும் ஒசந்த வெல ரவிக்கத் துணி
ஓரங் கிழிஞ்சதென்ன கண்ணம்மா – அதில்
ஒய்யாரந் தெரிவதென்ன பொன்னம்மா (கட்ட) (என்னடி)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Jan-18, 8:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 988

சிறந்த கட்டுரைகள்

மேலே