இறைவன்

பொருட்கள் எல்லாம் கண்டோம்
பொருட்களை பிரித்தோம்
அவற்றுள் அணுக்கள் உள்ளதைக்
கண்டுகொண்டோம் , அணுக்களை
பிரித்தோம் அவற்றுள் சிறு அணுக்கள்
இருப்பதை கணடறிந்தோம்
அணுக்களை பிரித்தோம் அது
பெரும் சக்தி உறைவிடம் என்பதை அறிந்தோம்
அறிந்தோம் அல்லோம் இந்த சக்திதான்
யாதென்று

பொருட்களெல்லாம் அவனே
அவற்றில் உறைபவன் அவனே
மண்ணில்,விசும்பில்,நீரில்,நெருப்பில்
காற்றில் இருப்பவன் அவனே
ஆணாய் இருப்பவன் அவனே
அவனே புருடோத்தமன் அல்லவா
பெண்ணும் அவனே அவனே
ஆதி சக்தி அகிலாண்டேஸ்வரி
நமக்கு தெரிவதில்லை நம்மில்
உறைபவன் அவனே நம் மூச்சாய்
அந்த உயிரின் உயிராய் இயங்கி
இருப்பவன் அவனே
இயங்கும் இயங்கா பொருளெல்லாம்
அவனே , விண்மீன்கள் அத்தனையும்
கோள்களெல்லாம் அவனே
இயக்கமும் அவனே உறக்கமும் அவனே
அவனின்றி உலகேதும் இல்லை
உயிர் இல்லை இதை அறிந்தால்
ஆணவம் நமக்குள் ஏன் என்று
வெட்கி அதை நீக்கி அவன்
பாதம் தேடி போற்றுவோம் அந்த
அங்கிங்கெனாதபடி எங்கும்
நிறைந்து நிற்பவனை நாடி

எழுதியவர் : வவன்-தமிழ்பித்தன்-வாசுதே (5-Jan-18, 8:52 am)
Tanglish : iraivan
பார்வை : 137

மேலே