நந்தவனம்
" வேலைக்கு போற பொண்ணு தான் எனக்கு வேணும்" சத்யன் தீர்மானமாக சொன்னான்.
"எதுக்கு சத்யன் நீ பெரிய கம்பெனில வேல பார்க்குற , உன் மாசச்சம்பளமே போதுமே, அது தவிர நமக்கு சொந்த வீடு, கார் இருக்கு சொத்துக்களும் இருக்கு அப்பா பிசினெஸ்ஸா உங்க அண்ணன் பார்த்துக்குறான் உன்னையும் பிசினஸ்ல வர சொல்லிக்கிட்டிருக்காரு நீ தான் அத காதுல போட்டுகொள்றியே இல்ல நீ வெளிய போய் வேல பார்குறதே உங்க அப்பாக்கு பிடிக்கல, இதுல உனக்கு வர போறவ வேலைக்கு போகணும்னா எப்படிடா ?"
"அம்மா.."
"நான் சொல்றன்னு கோவப்படாத "
"சொல்லுடா"
"அண்ணன், நீயும் அப்பாவும் சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டுவான்.
நான் அப்படி இல்ல. எனக்கு என் கால்ல நிக்கணும், ன்னான் படிச்சேன் எனக்கு பிடிச்ச வேலைய தேடிகிட்டேன் ."
"அம்மா ஒரு மனுஷனோட சொந்த விருப்பம் கல்யாணம் என்கிறது, அதுல வேற யாரும் தலையிட முடியாது. என் விருப்பப்படி ஒரு பொண்ண பாருங்க. நான் சொன்ன சொன்னது தான்!" என்று சத்யன் கோபத்துடன் கூறி சென்று விட்டான்.
"நான் கெடந்து எங்கே அவஸ்த்தை படுறேன். அவங்கப்பா வேலைக்கு போற பொண்ணு வேணான்னு சொல்லுறாரு. இவன் இப்படி சொல்லிட்டு போறான் ."
என்று புலம்பி கொண்டிருக்கையில்
"அத்தே, சாப்பிட வாரீங்களா..?" என்று ஒரு குரல் .
மூத்த மருமகள் பவித்ரா. பவ்வியமாக எதிரே வந்து நின்றாள் .
"எனக்கு இப்ப பசிக்கல"
"சரி அத்தே."
பவித்ரா உள்ளே போய் விட்டாள்.
அவளுக்கு பசித்தது ஆனால் சாப்பிட கூடாது. அது அந்த வீட்டு சட்டம். மாமனார், மாமியார், கணவன் , மச்சினன் எல்லாம் சாப்பிட்ட பிறகு தான் சாப்பிட வேண்டும்.
அவர்களும் தங்களுக்கு பசிக்காவிட்டாலும் பவித்ராவுக்கு பசிக்குமே என்று நினைக்கவும் மாட்டார்கள்.
பவித்ரா, சொந்தக்கார பொண்ணு மூத்தவன் சரவணன், அவனுக்கு பெரிதாக படிப்பு ஓடவில்லை அவனை பிசினஸில் இறக்கி விட்டார். பெரிய இடத்தில் வரன் பார்க்க முடியாது. அவரது ஒன்று விட்ட தங்கை மகள் பவித்ரா தன் பெற்றோர்களை இழந்து அனாதையாக இருந்ததால் அவளையே சரவணனுக்கு முடித்து விட்டார் அப்பா.
பவித்ரா மூத்த மருமகள் படிப்பு அரைகுறை என்றாலும் அழகிய தோற்றமும் அடக்கமும் நிறைந்தவள். எந்த மதிப்பும், எந்த உரிமையும் அந்த வீட்டில் அவளுக்கு இருந்தது இல்லை. கல்யாணமாகி ஐந்து வருடங்கள் முடிந்து விட்டன. இதுவரையும் குழந்தைகள் ஏதும் இல்லை. அதற்கு மாமியாரின் குத்து பேச்சு. மொத்தத்தில் பட்டும் நகையும் போட்டு பங்களாவில் வாழும் பணக்கார அடிமை பவித்ரா.
சரவணனும் அவ்வாறே எந்த உரிமையும் இல்ல. ஆரம்பம் தொட்டே வாயில்லா பூச்சாக வாழ்ந்து விட்டான். சுயமாக செயல் படும் ஆற்றல் இல்லை. அப்பாவின் நிழலே சொர்கம் என்று ஆகிவிட்டதால் அவனுக்கு நாக்கு என்ற ஒன்று இருப்பதே சுத்தமாக மறந்து போனவன்.
இளையவன் சத்யன் படப்படா!
யாரையும் சட்டென்று எடுத்தெறிந்து பேசி விடுவான். பின் விளைவுகளை பற்றி கவலையே படமாட்டான். சுயமாக படித்து அவனுக்கு பிடித்த வேலையையும் தேடிக்கொண்டான். வரன் பார்க்க தொடங்கி விட்டார்கள். அம்மாவின் தவிப்பு அதிகமாகி விட்டது.
அன்று இரவு டைனிங் டேபிளில் எல்லோரும் ஒன்று கூட அப்பா பேச்சை ஆரம்பித்தார்.
"பார்வதி நாளைக்கு போய் பொண்ண பார்த்துட்டு வரலாம்" என்றார் சத்யனின் அப்பா ராஜேந்திரன்.
"அவ என்ன படிச்சிருக்கா அப்பா?"
"அவளுக்கு ஏன்டா படிப்பு கோடீஸ்வரனோட ஒரே மகள்."
"சாரிப்பா எனக்கு வேணா." என்று வார்த்தைகளை உடைத்தெறிந்தான் .
"எனக்கு சமமா படிச்சா பெண் வேணும். வேலைக்கு போகிற கைநிறைய சம்பாதிக்கணும்."
கோபத்துடன் "அதெல்லாம் அவசியம் இல்ல" என்று அப்பா கூற
"அப்பா வாழப்போறது நான் இதுல என் விருப்பம் மதிக்கப்படலைனா எனக்கு இந்த கல்யாணமே தேவையில" என்று சத்யன் விவாதிக்க
"உனக்கு திமிர?" அப்பாவின் குரல் உயர்ந்தது.
"தன்னம்பிக்கைக்கு பேரு திமிருனா இது திமிராவே இருக்கட்டும். அதை இல்லைனு சொல்ல நான் தயாரா இல்ல". என்று பதிலுக்கு குரல் உயர்த்திய சத்யன் பாதியுடன் சாப்பாட்டை விட்டு எழுந்து போய்விட்டான்.
"நான் சொல்ற பொண்ண கட்டிக்காட்டி இவன் இந்த வீட்ல இருக்க வேணாம்". என்று கோபத்தை கொட்டிய அப்பாவும் எழுந்து உள்ளே போய் விட்டார்.
அம்மா, சரவணன், பவித்ரா மூவரும் ஸ்தம்பித்து நின்றார்கள். பெரு மூச்சு விட்டபடி அம்மா " என்னடா சரவணா இது" என்று மூத்தவனின் அருகில் வந்தவாறு
"எந்த பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?" சிறிது நேரம் மௌனமாய் நின்ற பார்வதியும் ராஜேந்திரனை பின் தொடர்ந்தாள்.
"நீங்க சரி மாமா கிட்ட பேசுங்க" என்று மெல்லிய குரலில் பவித்ரா அருகில் வந்தாள்.
"உங்க கிட்டேயாவது கதைக்குற உரிமை இந்த வீட்ல எனக்கு இருக்கா?"
"ஏன் பவித்ரா இப்படி கேக்குற ?"
" நீக்க ஊமையா பிறந்தாச்சு , பிறவி ஊமைகள் பேச முடியாது ஆனா வாய் உள்ள பிள்ளையாது ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழட்டும்."
"பவித்ரா......!"
"பாவம் சத்யன். இந்த வீட்டுக்கு இன்னொரு அடிமை வேணுமா? நன் போதாதா?"
என்று விம்மினாள்.
சரவணன் வேதனையுடன் அவளை பார்த்தான்.
"எனக்காக நீங்க பேசாதீங்க , பேசவும் மாட்டீங்க, அதை நான் எதிர்பாக்கவும் இல்ல."
சரவணனின் மௌனம் நீடித்தது.
"உங்க தம்பிக்காக பேசுங்க. அவராவது அவர் இஷ்டபடி வாழ்க்கை வாழட்டும்.!"
பார்வையில் வலி தெரிந்தது.
அப்பா தன்னறையில் நடந்து கொண்டிருந்தார். சரவணன் உள்ள நுழைத்தான்.
"அப்பா....."
நிமிர்ந்தார். கண்களில் கோபம் நிறைத்து வழிய காணப்பட்டார்.
"கல்யாணம் சந்தோசமா அமையலன்னாவாலாகி வேதனை ஆகிடும். தம்பிக்கு அப்படி ஆகா வேண்டாமேப்பா ...!"
"எனக்கே உபதேசமா? நீயும் தொடங்கிட்டியா ...?"
"ஐயோ! இல்லப்பா . அந்த தகுதியெல்லாம் எனக்கில்லை அப்பா. சத்யன் மேல உள்ள பாசம்..."
"அது எனக்கில்லயா?"
"இருக்கு. நிறைய இருக்கு. அவனும் யாரையும் காதல் பண்ணிட்டு வந்து நிக்கலயே. படிச்ச உத்தியோகம் பொண்ண கேக்குறான் , அப்படி ஒருத்திய நீங்களே தேர்தெடுத்து குடுங்களேன். உங்களுக்கு அந்த பெருமையும் கிடைக்கும் இல்லையா?"
அப்பா பார்வையில் இருந்த தீவிரம் குறைந்தது.
"படிச்ச உத்யோகம் பார்க்குற பொண்ணுக்கு திமிர் இருக்காதா?"
"இருந்த உங்களுக்கு அடக்க தெரியாமையா அப்பா?"
"ஆமாம்"
"தம்பி மனசு போல வாழ்க்கை அமையட்டும். எனக்காக, இதுவரை உங்க கிட்ட கேட்டதில்லை பவித்ராவுக்காக பேசினது இல்ல. தம்பிக்காக இந்த ஒரு வாட்டி மாத்திரம்..."
"சரி நீ போ.நான் யோசிக்கணும் , உங்க அம்மாவை வர சொல்லு.
"சரிப்பா"
சரவணன் வெளியே வந்தான்.
"அப்பா கோபப்படலயே அநேகமா சிந்திப்பார் போல" என்று தனக்குள் பேசிய படி தன் அறைக்குள் சென்றான்.
மறுநாள் காலை... அப்பா அழைத்தார் . சரவணன் ஓடி வந்தான். சத்யனும் இருந்தான்.
"உனக்கு படிச்ச உத்யோகம் பார்க்குற கை நிறைய சம்பாதிக்கிற பொண்ணு தானே வேணும்?"
"ஆமாம்"
"நான் தேர்தெடுக்கலாமா?"
"தாராளமா. ஆனா அந்த பொண்ண எனக்கு பிடிச்சிருக்கணும். அவகிட்ட நான் தனியா பேச நீங்க சம்மதிக்கணும்.
"பார்க்கலாம்"
அப்பா ஒரு மணி நேரத்தில் தரகரை வரவழைத்தார். தரகரும் வந்தார் சகல விடயங்களையும் கூறினார்.
"நாளைக்கு நீங்க கெட தகுதியுள்ள ஒரு பெண்ணோடு வாரேன் சார் ."
விடைபெற்று சென்றவர் சொன்னபடி மறுநாள் வந்துவிட்டார்.
"சரி , மூணு வரன் புடிச்சிட்டு வந்திருக்கேன். ரெண்டு பொண்ணு பணக்கார வீட்டு பொண்ணுங்க. ஒன்னு மிடில்கிளாஸ் பொண்ணு."
புகைப்படத்தை காட்டினார்.
"சத்யன் இருக்கானா பவித்ரா?"
சத்யன் வந்தான்.
"இந்த மூணு போட்டோல உனக்கு எது புடிச்சிருக்கு?"
சத்யன் பார்த்தான்.
ஒன்றை தேர்தெடுத்தான்.
பிரியங்கா- மிடில்க்ளாஸ் பொண்ணு ரயில்வே அதிகாரியின் மகள். மூன்று பெண்களில் இளையவள் பிரியங்கா. தனியார் கம்பெனியில் ஜூனியர் என்ஜினீயர். மாதம் சத்யனுக்கு இணையான சம்பளம். ஒரு வருட வேளையில் தன் குடும்பத்தை கட்டி எழுப்பி விட்டாள்.
"மத்தபொண்ணு பணக்காரங்க ஆனா இந்த பொண்ண தன் எனக்கு புடிச்சிருக்குப்பா. இந்த பொண்ணையே பார்க்கலாம்" என்றான் சத்யன்.
மறுநாளே பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மலை நான்கு மணிக்கு அப்பா,அம்மா.சத்யன் ,சரவணன் நான்கு பேருமாய் பெண் பார்க்க சென்றார்கள்.
வாடகை வீடு தான். அப்பா ரிடையராகி ஒரு வருடம். ப்ரியங்கா சுடிதாரில் தான் வந்தாள். ஹலோ சொன்னாள் எல்லோரிடமும் கலகலவென பேசினாள்.
"உன் கூட என் பிள்ளை தனியா பேச ஆச படுறான் மா.
"எதுக்கு ? அவர் என்ன கேக்கணுமோ அதை இங்கயே கேக்கலாம். எந்த உறவும் உண்டாகம என்ன ரகசியம்.?"
"என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா பிறகு நான் வேலைய விட சொன்ன விட முடியுமா?"
"அப்படி சொல்ல கரணம்?"
"எங்க கிட்ட நிறைய பணம் இருக்க நீ சம்பாதிச்சு தான் குடும்பம் நடக்கணும்னு இல்லை."
"வெரிகுட். நான் வேலைய விட முடியாது.
அந்த அபிப்ராயம் இருந்த நம்ப கல்யாணம் நடக்க வேண்டாம்.
ரெண்டு அக்காங்க கல்யாணம் முடிஞ்சி எங்கப்பா கடன்ல இருக்காங்க . இப்ப என் கல்யாணம் அதனால என் ஐந்து வருஷ சம்பளம் எங்கப்பாவுக்கு தான் போகும். அதனால நீங்க சம்மதிச்சா தான் கல்யாணம்.."
"ஒரு நிமிஷம், நீ எங்க வீடு மருமகள் ஆனா பின்னால உங்க அப்பாவுக்கு எப்படி சம்பளத்தை தர முடியும்?"
"புருஷன விட தகப்பனார் உசத்தியா?"
"அப்படி நான் சொல்லல. என் பணமே வேடாம்ன்னு சொல்லுற நீங்க அதை நான் யாருக்கு தந்த என்னனு விடலாமே"
"பிரியா," அப்பா குரல் கொடுத்தார்.
"இப்படியே நீ பேசினா உனக்கு கல்யாணம் நடக்கும்னு தோணல"
"நடக்கலான போகட்டும். பெண் தணிச்சி வாழற சக்தியை தாரது தானே படிப்பும் உத்தியோகமும் இல்லைனா எப்பவும் அடிமையா தான் இருக்கனும்."
"புரட்சியான சிந்தனையா?"
"இல்ல யதார்த்தமான எண்ணம் "
"சரி உன்னால எங்களுக்கு என்ன லாபம்"
"நான் மாடு இல்ல. வாகினதும் பால் கறந்து விக்க , மருமகள் மன்னிக்கவும் இவர் யாரு?"
"என் மூத்த பிள்ளை சரவணன்."
"இவருக்கு கல்யாணம் ஆயச்ச?
"ஆய்ச்சு. பவித்ரா இவன் மனைவி ."
"அவங்க என் வரல இன்னிக்கு?"
" அவ வரணுமா வேணாமான்னு தீர்மானிக்க வேண்டியது நாங்க."
"அவங்க என்ன படிச்சிருக்காங்க?"
"பள்ளிக்கூடம் தாண்டல"
"சம்பாதிக்கிறார்களா ?
"படிப்பே இல்லனு சொல்லுறேன் பின்ன எப்படி அவ சம்பாதிப்பா?"
"அவங்களால் உங்களுக்கு என்ன உபயோகம் ? ஸாரி என்னால என்ன லாபம் னு கொஞ்சம் முன்னாடி கேட்டிங்களே அதுனால தான் இத கேக்குறேன்.... ஏன்னா அவர்களும் உங்க வீடு மருமகள் இல்லையா?
"வீட்டு, சமையல் எல்லா வேலையையும் அவ தான் பார்த்துக்குற. ஸ்
"மொத்தத்துல சம்பளம் இல்லாத வேலைக்காரி"
சரவணன் முகம் சிவந்தது.
"நீ அதிகம் பேசுற " அப்பா சீற
"இல்ல சார், மேற்படி வேலைகளை ஒரு பணக்கார வீட்ல வேலகாரி தான் செய்வானு நான் கேள்விப்பட்டிருக்கேன் அதனால சொன்னேன் ம்ம்ம்ம்ம்....
விஷயத்துக்கு வருவோம். நீங்க சொன்ன வீட்டு வேலைகளை எல்லாம் நானும் உங்க வீட்டுக்கு வந்தா செய்ய தயார். ஐமீன் இன்னொரு வேலகாரி."
"நீ பெரிய படிப்பெல்லாம் படிச்சவ "
"தப்பில்ல. உன்னால என்ன லாபம் னு கேட்டிங்களே.. அடுக்கு இது பதில் நீங்க சம்பளம் தர்றதா இருந்த உங்க மூத்த மருமகள் சம்பளத்துல பாதி எனக்கு வரும். அது இல்ல அதனால பிரச்சினை இல்ல. இப்ப உங்க பிள்ளை என்னைக் கல்யாணம் செய்ஞ்சிக்கலாமா?"
அப்பா எழுந்தார்.
"தாராளமா ... நீ படிச்சவள் உத்யோகம் பார்க்கிறவள் ஆனா, பவித்ரா செய்யுற வேலைகளை நீ செய்ய தயாரா இருக்கனும்.
"நிச்சயமா"
"இந்த கல்யாணம் நடக்கும் அப்புறம் நீ பேச்சு மாறின நீ உன் வேலைய விட வேண்டி வரும்."
"ஒப்புக்குறேன்"
சத்யன் ஆடிப்போனான் .
அப்பாவிடம் நேருக்கு நேர் நின்று கொஞ்சமும் சளைக்காமல், தோட்காமல் எதிர்த்து வாதாடி அப்பாவையே கன்வின்ஸ் செய்த முதல் பெண் அவளிடம் மதிப்பே உண்டாகிவிட்டது சத்யனுக்கு.
"கல்யாணம் எங்க செலவு"
"மன்னிக்கணும்! நாங்க பிச்சக்கரங்க இல்ல. எங்களால முடிஞ்சது நாங்களும் செய்ய தான் போறோம்.
"அக்ரீட்."
"என்னைக்கு நிச்சயதார்த்தம் ?" பிரியங்காவின் அப்பா பவ்வியமாக கேட்க
"இன்னைக்கு! இப்பவே!" என்றார் சத்யனின் அப்பா
அங்கேயே தாம்பூலம் மாற்றி கொள்ளப்பட்டது. தேதியும் குறிக்கப்பட்டது .
ஒரே மாதத்தில் கல்யாணம்.
வீடு வந்து சேர்ந்தார்கள்.
அன்று இரவு சரவணன் பவித்ராவிடம் சகலமும் சொன்னான்.
"ரொம்ப நல்ல பொண்ண இருக்கா" சரவணன்
"எல்லாம் இப்ப பேசுவா படிச்ச, தந்திரசாலி . கழுத்துல தாலி ஏறியதும் போக்கே மாறும்.
சத்யனை இழுத்துகிட்டு தனி குடித்தனம் போக போறா"
"அப்படியா சொல்லுற"
"நடக்குதா இல்லையானு பாருங்களேன்"
"நடக்கட்டும்"
"நடந்தா நானும் இந்த வீட்ல இருக்கா மாட்டேன்."
"நீ சம்பளம் இல்லாத வேலைக்காரியா இந்த வீட்ல கெடந்து கஷ்டபட வேணாம்.
நானும் அப்பாவுக்கு அடிமையும் இல்ல நாங்களும் வெளியே போயிறலாம்"
பவித்ரா ஆடிபோனாள்.
"என் புருஷனா இப்படி பேசுறார்?"
இந்த ஊமையை இப்படி பேச வைச்சது யாரு
அந்த பிரியங்கா இவர மறைமுகமா உசுப்பி விட்டாளா?"
இவருக்கா ரோசம் பொத்துட்டு வருது?" என்று பல கேள்விகளை தனக்குள் கேட்டு கொண்டாள்.
பவித்ராவுக்கு அந்த இரவு முழுதும் உறக்கமில்லை
.
சாதாரணமாக அதிகமாக பேசாத சரவணன் தினசரி அவளிடம் பேச தொண்டங்கினான்.
கல்யாணம் முடிந்து விட்டது.
பிரியங்காவின் பிடிவாதத்தால் சுமார் மண்டபத்தில் அவர்களது செலவில் தான்நடந்தது.
ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்கப்பட்டதும்
பூஜை அறையில் பிரியங்கா விளக்கேற்றினாள். முடித்ததும் நேராக பவித்ராவிடம் வந்தாள்.
"அக்கா, நான்சமைக்குறேன்"
"இருக்கட்டும், நீ இணைக்கு தானே வந்திருக்க.
"தப்பில்ல , என்னால இந்த வீட்டுக்கு என்ன லாபம்னு யாரும் கேட்க கூடாது.
இப்பவே வேலைகளை ஒப்புக்கொள்ளுறேன். விடிச்சதுல இருந்து ராத்திரி வரைக்கும் நீங்க செய்யுற வேலைகளை பட்டியல் போட்டு கொடுங்க. நான் காலையில எட்டரை மணிக்கு போகணும் அது வரைக்கும் செய்ய முடிஞ்ச அளவு செய்றேன். ஈவினிங் ஆறரைக்கு வந்துருவேன் மிச்ச வேலைகளை வந்து செய்றேன்."
"வேணாம் பிரியங்கா நீ ஆபீஸ் வேலைகளையும் பாக்கணும் நான் இந்த வேலைகளை பாத்துக்குறேன்."
"அது பிறந்த வீட்டுக்காக இது புகுந்த வீட்டுக்காக."
சத்யன், பிரியங்கா அன்று முதலிரவு அறைக்குள் வந்தார்கள்.
சத்யன் தொட
"உங்க அண்ணியோட கை விலங்கு என்னைக்கு உடையுதோ அன்னைக்கு தான் எங்களுக்கு முதலிரவு."
"இப்ப குட் நைட்"
காலை நான்கு மணிக்கு எழுந்தாள் பிரியங்கா.
அதீத வேகம்
பவித்ரா ஒரு நாள் முழுவதும் செய்யும் வேலைகளை பிரியங்கா ஒருத்தியே மூன்று மணி நேரத்தில் முடித்து விட்டாள்.
வீட்டில் மாமனார் உட்பட மாமி.சத்யன் என அத்தனை பெரும் மிரண்டு போனார்கள்.
ஒரே மாதத்தில் பிரியங்கா எல்லோரையும் மிரள வைத்து விட்டாள்.
வேலை நேரம் போக பவித்ராவுக்கு ஆங்கிலம், கம்ப்யூட்டர் என சகலமும் கற்று தந்தாள்.
மூன்றே மாதங்களில் பவித்ரா பெருமளவு தேர்ச்சி பெற்று விட பவித்ராவுக்கு தான் வேலை பார்க்கும் கம்பெனியில் பத்தாயிரம் சம்பளத்துக்கு ஒரு வேலை வாங்கி விட்டாள்.
குடுப்பமே மிரண்டு போனது.
" மாமா எந்த வேலையும் வீட்ல கெட்டு போகலை நாளைல இருந்து அக்கா என்னோட வேலைக்கு வார்றங்க " என்றதுமே
சரவணன் சந்தோஷத்தில் துள்ளி விட்டான்.
எதும் தெரியாத அப்பாவி, அடிமையாக இருந்த பவித்ராவுக்கு சகல விடயங்களையும் கற்று தந்து விழிப்பிணர்ச்சியை ஏற்படுத்தி சமூகத்தில் அவளையும் தனித்து நடமாட விட முடியும் என்று நிரூபித்த பெண்.
வந்தது முதல் சண்டை போட்டதில்லை. ஒரு விவாதமோ, விபரீத விளைவுகளோ இல்லை.
எந்த வேலையும் நிற்கவும் இல்லை. சிரிப்பை தவிர வேறு எதுவும் இல்லை. குடுபத்தின் குதூகலம் கொஞ்சமும் குறையவில்லை.
அபார சாதனை.
அன்றைக்கு மாலை பிரியங்கா வீடு திரும்பினாள்.
அவள் எதுவும் சொல்லவில்லை. பவித்ரா தான் ஆரம்பித்தாள்.
"மாமா, பிரியங்காவுக்கு லண்டன் போற வாய்ப்பு வந்திருக்கு. ரெண்டு வருஷ ப்ராஜெக்ட் . மாத நம்ப காசுக்கு கிட்டத்தட்ட மூணு லட்சம். இங்கேயுள்ள சம்பளமும் கிடைக்கும். அங்க சகல வசதிகளும் இருக்கு. அடுத்த வாரமே கிளம்பனும்.
"வாழ்த்துக்கல்லம்மா"
"சாரி மாமா, நான் போகல"
"ஏன்மா ? அற்புதமான வாய்ப்பு உன் அப்பா கடனை ஆறே மாசத்துல அடைச்சிறலாமே!"
"அதுக்காக போக முடியுமா மாமா? இந்த வருஷம் இல்லாட்டி என்ன கடனை அடுத்த வருஷம் கட்டிக்கலாம். இங்கே என் கணவர் ,மானார்,மாமியார்,அன்பான அக்கானு எனக்கொரு குடும்பம் இருக்கு. எல்லாத்தையும் தனியா விட்டுட்டு அப்படி என்ன லண்டன் ஒசத்தி? பணத்துக்காக குடும்பத்தையும், பாசத்தையும் விட்டுட்டு பறந்து போறதுல எனக்கு விருப்பம் கிடையாது.
நான் இந்த மண்ணுக்கு சொந்தமான பொண்ணு எனக்கு பணம் பெரிசில்லை."
அம்மா அழுது விட்டாள்.
அப்பா அருகில் வந்தார்.
"என்ன மன்னிச்சிக்க பிரியங்கா, நீ உன் வேலையை இங்கயே தொடரலாம். என் கம்பனிக்கும் ஓ...
சாரி நம்ப கம்பனிக்கும் ஆலோசனை தர அப்பப்ப நேரத்தை ஒதுக்குவியம்மா?"
"நிச்சயமா மாமா"
"இப்ப காபி குடும்மா" குரல் கேட்க திரும்பினார்கள்.
சரவணனும், சத்யனும் காபி கோப்பைகளுடன் மனைவிகள் எதிரே வந்து பவ்வியமாக நின்றார்கள்.
***முற்றும்***