நலமாய்த்தான் நகர்கின்றன நாட்கள்

கொண்டு வரவில்லை ,

கொண்டு போகப்போவதுமில்லை .

இடைப்பட்ட வேளையில்,

விதிக்கப் பட்ட பாதையில்

சென்று கொண்டிருக்கிறேன்

செலுத்தப் பட்டபடி !

நலமாய்த்தான் நகர்கின்றன நாட்கள் ..

இதில் எங்கே இருக்கிறது ?

'நான்' என்பதும் ,

'எனது 'என்பதும் .


உலகம் மிக அழகானதாய் ,

மிக விசாலமானதாய்த் தெரிகிறது ,

இது நினைவுக்கு வரும்போதெல்லாம் !!!!!!!


எழுதியவர் : சித்ரா ராஜாசிதம்பரம் (2-Aug-11, 10:02 pm)
சேர்த்தது : chithra rajachidambaram
பார்வை : 264

மேலே