அப்பா என் அப்பா 1

அப்பா என ஓடி வந்து
உங்கள் கால்களை
கட்டிக்கொள்ள ஆசை
நீங்கள் குனிந்த
என்னை கன்னம்
கிள்ளி என்னவென்று
தூக்கி தோழிலிட்டு
தெருவில் நடந்து
மிட்டாய் வாங்கி
வீடு வந்துசேர
நானோ உன்னைவிட்டு
இறங்காமல் அடம்பிடித்து
உன்னை ஒட்டிக்கொள்ள
போனா போகுதுஎன
ஒரு கையில் நானும்
ஒரு கையால் செய்தித்தாளையும்
பிடித்தபடியே நீ
படித்து முடித்தாய்

நீ குளிக்க போகையிலும்
உன் துண்டின் நுனி
நூலை இழுத்து
பிடித்தபடி அழுத்தமாய்
நின்றுகொண்டிருந்தேன்
நான்

ஆர்ப்பரித்த என்னை
ஆசுவாசப்படுத்த வந்த
அன்னை அணைத்து
என் பிடி விடுத்தாள்

நீ குடு குடுவென
அலுவலகம் செல்ல
கிளம்புகிறாயாம்
நானோ உன் பெல்ட்
செருப்பு என்று
ஒவ்வென்றாயாக எடுத்து
கொண்டுருந்தேன் விடுப்பு
எடுக்க வைக்க முடியாவிட்டாலும்
எப்படியாவது உன்னை
தாமதமாக்கிவிட நினைத்தபடி

அலுவலகம் செல்லுமுன்
ஆசையாய் கொஞ்சி தீர்க்க
அள்ளிஅள்ளி எடுத்து என்னை
கட்டி அணைத்து இறுக
நீ முத்தம் கொடுத்தபோது
உன் கழுத்தில் இருந்து
கீழ இறங்க தோன்றாமல்
இன்னும் அதிகமாய்
கட்டிகொண்டேன்

இறங்காமல் ஆடம் பிடித்த
என்னை அதட்டி
அப்படியே மெல்ல
உருவி எடுத்த
அன்னை சொன்னாள்
செல்லம் வா என்று

அவளின் கழுத்தோடு
சுற்றிக்கொண்டு அவள்
முத்தத்தின் ஈரத்தில்
அமைதி பெற்றாலும்
அவளிடம் என் மனது
மெல்ல கிசுகிசுத்து நான்
அப்பா பிள்ளை என்று
அப்பாவின் முகம் தூரமாவதை
ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டு

எழுதியவர் : யாழினி valan (6-Jan-18, 2:58 am)
பார்வை : 371
மேலே