ஆத்மாசெல்லும் அமரர்ஊர்தி

மார்கழிக்குளிர் நடுநடுங்க மாநகரத்தில் நடைபயிற்சி
தார்சாலை ஊடுருவிய அமரர்ஊர்தி இடைநிற்க...

சிகப்புவிளக்கு சந்திமுனையில் சிறிதளவு தடுமாற்றம்
அகமழுத சொந்தமகள் பிரிவுதாளாது முடுக்கியெழுப்ப...

மின்மயானம் செல்வதறிந்த என்சிந்தை எடுத்துச்சொல்ல
முன்னெழுந்த இல்லாஉயிர் எழுந்தமர்ந்து எதையோதேட...

அக்கம்பக்கம் அலாவியவிழிகள் அடுத்தநொடியே உற்றுநோக்க
திக்கென்று அலாதிநின்று விடுத்தநகை பற்றிடக்கண்டேன்...

மறுமொழிய நகையாடல் தடையில்லை ஏனென்றால்
இறுதிநிலை நகைத்துசெல்லும் சடையனைநான் கண்டதுஎங்கோ...?

பெருமூச்சு படபடக்க விழுந்ததெந்தன் வியர்வைத்துளிகள்
திருவுருவை திடமாக்கி எழுந்ததெந்தன் தயக்கவினா...!

காணாமுகம் காட்டியசடலம் கனவிலேனும் கண்டேனாநானும்...!

மாசிப்பட்ட பாசிப்பயறு பூசிச்சென்ற தூசித்துகள்கள்
வேசிவீட்டில் ஆசிபெற்று காசிக்கரையில் பேசக்கண்டேன்...

எட்டுமணி இராசிபலனை பத்துநிமிடம் பதியவைத்த
பட்டுத்துணி கணிதமேதை முத்திபெற்று விதிதுறந்தாரோ...

கடந்தவாரம் பயணமதில் இடைநில்லா மடமைபேசி
உடமைதொலைத்து பயந்துநின்ற கொடையாளிதான் இடறிப்போனாரோ...!

வயல்காட்டில் மயில்பிடித்ததாய் வலைதளத்தில் தடம்பதித்து
வழக்காடு மாமன்றத்தில் இழுக்குநேர உயிர்துறந்தவரோ...!

கனநேரம் கண்டமுகம் கடைசிவரை நினைவிலில்லை
மனமறுகி மீளும்முன்னே அடைந்கொண்டது அவரதுஆத்மா...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (7-Jan-18, 12:01 pm)
பார்வை : 46

மேலே