தோசை மாவு

தோசை மாவு..!
(சிறு கதை தொகுப்பு)

அம்மா- தம்பி! சாப்பிட வாப்பா..
மகன்- இதோ வரேன் மா.
எதுக்குமா! இவ்வளோ தோசை..?
நான் சாப்பிட்டு காலேஜ் போகவா?
இல்ல கவுந்தடிச்சு தூங்கவா?

அம்மா- டேய்? மெல்லிசா அஞ்சு தோச ஊத்திருக்கேன்..ரகல பன்னாம சாப்பிடு..
(Mind voice- போன மாசம் பத்து தோச சாப்பிட்டான். New year, resolution சொல்லி டயட் இருந்திட்டு உயிர வாங்குரான்.)

மகன்- இப்படியே செல்லு..
(Mind voice- எப்படியாவது உடம்ப இளைச்சு ஸ்லிம் ஆகலாம்னு நினைச்சா..முடியாது வோல)

20 வருடம் கழித்து..

மனைவி- ஏங்க சாப்பிட வாங்க..
கணவன்- இதோ வரோன்..
என்னது இது? மொத்தமா முனு ஊத்தாப்பம்
வச்சிருக்க..

மனைவி- மெல்லிசா நாலு ஊத்தினா, டயட்னு காத விட்டுட்டு அப்புறம் பத்து நிமிஷம் கழிச்சு பசிக்குதுனு சொல்லுவிங்க
(Mind voice - நெட்ல அதையும் இதையும் பார்த்திட்டு இங்க வந்து என் உயிர வாங்க வேண்டியது)
கணவன்- ச்ச!.. கொஞ்சம் கூட ஜென்ரல் நாலோட்ஜ் கிடையாது.. ஜி.ம் டயட், பேலியோ டயட் எவ்வளவோ வந்தாச்சு..இன்னும் தோச சுட்டு சாப்பிட்டு இருக்கா..அன் எஜுகேடட் பெலோ!
(Mind voice - மேலே கூர பட்டவை அனைத்தும்)

மனைவி- இப்ப தோச வேணுமா? வேண்டாமா?
கணவன்- இதோ.. வந்துட்டேன்!

கருத்து- மாவு என்னவோ ஒன்னு தான். அதை பயன் படுத்தும் விதம் தான் வேற. வார்த்தைகள் என்னவோ ஒன்னு தான், ஆனா அதை பயன் படுத்துர விதமும் தோரணையும் தான் வேற.
புரிஞ்சவன் புத்திசாலி.

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (7-Jan-18, 1:55 pm)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
பார்வை : 113

மேலே