பெரியோர் இடஞ்சேரில் அக்கணமே துன்பம் நீங்குமென்று அறி - நீதி வெண்பா 100
நேரிசை வெண்பா
கங்கைநதி பாவம் சசிதாபம் கற்பகந்தான்
மங்க லுறும்வறுமை மாற்றுமே – துங்கமிகும்
இக்குணமோர் மூன்றும் பெரியோர் இடஞ்சேரில்
அக்கணமே போமென்(று) அறி. 100 நீதி வெண்பா
பொருளுரை:
கங்கைநதி பாவத்தையும், சந்திரன் தாபத்தையும், கற்பக மரம் எல்லா நலங்களையும் மங்கலுறச் செய்யும் வறுமையையும் போக்கி நல்லன செய்யும்;
புண்ணிய சீலராகிய பெரியோரைச் சேர்ந்தால், பாவம் தாபம் வறுமை முதலிய சிறுமைகள் யாவும் ஒருங்கே நீங்கும்; அது மட்டுமின்றி, பலவகை பெருமைகள் மிகவும் பெருகும் என்று அறிந்து கொள்ள வேண்டும்.
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
