மனைவி

விதையில் விளைந்த பயிராக
என் வாழ்வில் வந்தாய் உறவாக
பார்வைகள் பறிக்கும் பசும்பயிர்கள்
என் பார்வையை பறித்தது உன் கண்கள்

உதிக்கும் சூரியன் உறையாதோ!
நம் உணர்ச்சிகள் மேலும் பெருகாதோ!
இப்படி எண்ணம் கொஞ்சம் கூடும்
இரவும் முடிந்து போகும்

இசையில் சேவல் பறக்கும்
என் அகிம்சை உடனே தொடங்கும்
குளியல் போட்ட பிறகும்
உன் கூந்தல் தீண்ட தோணும்

கதிரை சுமக்கும் பயிராக
நம் உயிரை சுமந்தாய் தாயாக
வேலையில் வேதனையும்
கடனும் கண்ணீரும் கரைபுரண்டது
ஊரெல்லாம் சாலை-அதெல்லாம்
இருலாத பாதை
செல்லதான் முடியவில்லை
சென்றாலும் கதியில்லை
வயிற்றில் இருக்கு பாரம் இருந்தும்
உன் நெஞ்சில் சேர்த்தாய் என் பாரம்

உடல் மோகம் தீர்ந்தாலும்
நம் உயிர் மோகம் தீராது

வாழும் வரை உன் உடலோடு
இறந்த பிறகும் உன் உயிரோடு

எழுதியவர் : அஸ்வந்த் (8-Jan-18, 10:06 pm)
Tanglish : manaivi
பார்வை : 87

மேலே