பள்ளியறையில் நான்

தேன்போன்ற தேகம்மறைக்க
தேனீயாக நான் அவதரிப்பேன்
போதாதென்று எண்ணிவிட்டால்
போதிதர்மனிடம் வித்தைகள் கற்பேன்
சிதறும் அமுதமுத்தத்தை
சிறிதுசிறிதாக உயிரில் சேர்ப்பேன்
குங்குமமிட்ட நெற்றியில்
உயிருள்ள வரையில் குடியிருப்பேன்
அறியாநேரம் உன்னைத்தொட
அரும்பிய மீசைக்கும் ஆசைவரும்
காத்திருந்து காத்திருந்து
காமத்தில் சிக்கி மூர்ச்சையாகும்
சரியானநேரம் எதுவென்று
சனிப் பெயர்ச்சியாக காத்திருப்பேன்
மார்பினில் நீசாய
மானமிழந்து உனக்காக பூத்திருப்பேன் !...