எண்சீர் விருத்தம்

கவிச்சோலை -- எண்சீர் விருத்தம்

நெல்லுடனே அரிசியுமே கலந்து நிற்க
------- நேசமுடன் பெண்மகளோ பிரித்து நோக்கக்
கல்லினையும் பொறுக்கியுமே தரமாய் மாற்றிக்
------- கணவனவன் வரும்வழியை ஏக்கத் தோடு
வில்லோடும் பேசுகின்ற புருவம் தன்னில்
------- வித்தகியும் பார்க்கின்றாள் சமையல் செய்ய.
சொல்லோடு சுவைபெறுமே சோறு மிங்கே
------- சொக்கித்தான் போவானே இல்லம் சென்றே !!

ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (9-Jan-18, 8:14 pm)
பார்வை : 81

மேலே