குறுநகை சிரிப்பின் கள்வன் அவனே
![](https://eluthu.com/images/loading.gif)
பகல் பொழுது குறுகும் கதிரவன் அழகே
பகல் பொழுது நான் காணும் மணநாள் கனவே
குறுநகை சிரிப்பின் கள்வன் அவனே
காலம் கொண்டு சேர்த்த என் தோழன் அவனே
நாணங்கள் சோ்ந்து என் முகத்தை மறைக்குதே
நாள்கள் முடியாமல் விழிகள் அவனை தேடுதே
பிடித்த உறவின் அன்பை நெஞ்சம் தேடுதே
படிக்க துவங்கும் உறவின் அன்பை நெஞ்சம் எண்ணுதே
கருவறை நண்பனின் குறும்பு இன்று விடுமுறை எடுக்குதே
காத்திருந்து கருவறை வாசலில் பூக்கள் மலருதே
தூரம் விட்டகன்றாலும் தாய்வீட்டு பாசம் குறையாதே
தூரல் மழை கண்ணில் பதியாமல்
வாழும் வீட்டின் நேசம் கூடுதே
- சஜூ