HIGH ஹூ

எதிர்கால தூக்கத்திற்கு
சேமிக்கப்படுகின்றன
இன்றைய முழிப்புகள்



உறங்குமுன் உயிரோடிருப்பவன்
உறங்கியபிறகும் உயிரோடிருக்கிறான்
நரகத்திலோ சொர்கத்திலோ



போதுமென்ற மனம்
தற்காலிகமாக கிடைக்கிறது
தியான அறையில் மட்டும்



கடைபிடிக்கப்படாத
மனித விதிகளுக்கு
கண்டுபிடிக்கப்பட்ட
மூன்று விஞ்ஞான விதிகள்
நில்...
கவனி...
புறப்படு..

எழுத்து
ஜெகன் G

எழுதியவர் : ஜெகன் G (10-Jan-18, 11:18 am)
சேர்த்தது : ஜெகன் G
பார்வை : 174

மேலே