யார் இவள்

ஒய்யார நடை நடந்து
என்னை கொய்யாமல் கொய்திடுவாள்
பாவை விழி மொய்யாமல் மொய்ந்து
எந்தன் விழி துய்யாமல் துயில் எடுத்திடுவாள்
இதழ் விரிமலரில் தேன் சுனையாமல் சுனைந்து
என்னை குலையாமல் குலையும் குலவியாக்கிடுவாள்
பௌர்ணமி நிலவொளி காட்டாமல் காட்டி
என்னை விழுங்காமல் விழுங்கச் சொல்லி படமெடுத்தாடச் செய்திடுவாள்
காரிருளை நூல் நூலாக கோர்க்காமல் கோர்த்து
எந்தன் மேனியில் மேவாமல் மேவி சென்றிடுவாள்
பூத்து குலுங்கும் சோலையை பாவாடை தாவனியில் மறைக்காமல் மறைத்து
எந்தன் மனதை பூட்டாமல் பூட்டி ஒர் நந்தவனத் தேரில் செல்லும் சாரதி
யார் இவள்?

எழுதியவர் : ச. செந்தில் குமார் (12-Jan-18, 10:52 am)
சேர்த்தது : ச செந்தில் குமார்
Tanglish : yaar ival
பார்வை : 258

மேலே