அழகோவியம்

மஞ்சள் வெயில்
என் முகத்தோடு மோதி
உன் பூ முகத்தை நினைவு படுத்துகிறது...

என் இதயம்
உன் நினைவுகளை
வருடும்போது
வானிலிருந்து
பூமழை பொழிகிறது...

நதி ஒன்று குளிக்கிறது
அது உன் மேனியைத்தொட்டு
மஞ்சள் பூசிக்கொள்ளவேண்டுமாம்...

நீ தேநீர் பருகிய அந்த
கோப்பை இன்னும் என்
இதய மாடத்தில்
அழகு பொருளாகவே
வைக்கப்பட்டுள்ளது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (13-Jan-18, 12:33 am)
பார்வை : 91

மேலே