துணுக்குகள்

என்னை பித்தனாக்கி கடந்துபோன ஏதோ ஒரு காதல் தான் எனக்கு இந்த பொறுப்பையும் ஆசைகளையும் சுமைகளையும் சொல்லிக்கொடுத்து போயிருக்கிறது
================================================================================

அவளுக்கும் உங்களுக்கும் அது எத்தனையாவது காதலாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகட்டும்,
அவளைக்கண்ட நொடிமுதல் அதை புதிதாக்கிக்
கொடுத்து வாழுங்கள்
=======================================================================================

இந்த வாழ்க்கை, நமக்கு அன்பைக்கற்றுக்கொடுக்கும் யாரோ ஒருவரை அறிமுகப்படுத்திதான் கடந்திருக்கும் எல்லாருடைய அந்தந்த கட்டங்களில்
============================================================================

பூக்கள் எப்போதுமே அடம்பிடிப்பதில்லை முதலில் நுகர்ந்துவிட்டவர்களைத் தவிர அடுத்தவர்களுக்கு தன் வாசனையை நுகரக் கொடுக்கப்போவதில்லை என்று,,
==================================================================================

நேற்றிரவிலிருந்து, சற்று முன்னால்வரை என்னை முறுக்கிப்பிடித்திருந்த படுக்கையை தட்டி சரி செயகிறேன், மீண்டும் அதற்குள்ளேயே மனம் போக போக,அதையே வெறித்தவாறு யோசிக்கிறேன், நான் இதற்கு இவ்வளவு பலவீனமானவனா என்று
=============================================================================

எழுதியவர் : அனுசரன் (13-Jan-18, 1:13 am)
Tanglish : thunukkukal
பார்வை : 98

மேலே