பாரிஸ் பூமி

பாரிஸ் பூமியே வணக்கம்!என்னை தெரிகிறதா?-யான்
மணமுடித்த மணவாளருடன் - உனது மடியில்
பாதம் வைத்த,சிலிர்ப்புடன் உள்ள புதிய மலர் !
பல கனவுகளுடன் இருந்த -யான்
புரியாத மொழி கேட்டு பதை,பதைத்தேன் -என்னை
உனது தோழியாக ஏற்றுகொள்!
எனது அன்பரோ புரிந்து கொண்டால் -இம்மண்ணை
பந்தாடி,பறப்பாய் கவலை வேண்டாம் என்கிறார்
உனது நட்பு எனக்கொரு சாந்துபொட்டு !
தனிமை போராடிகிறதா என்றார்?-யான்
எனது தோழியுடன் கைகோர்த்துக்கொண்டு
உலாவி வருவதால் இல்லை என்றேன்!
தோழி யார் என்றார் ?-இதோ
உன்னை அறிமுகம் செய்கிறேன்-ஏனெனில்
ஆரம்பத்தில் நெருப்பாக இருந்த -யான்
உன்னால்தான் ஜோதியாக சுடர்விடுகிறேன் !
ஆதலால் என்னுள் என்றும் உன்னை மறவேன் .

எழுதியவர் : மங்களம் நீரஜா சத்தியநாரா (13-Jan-18, 5:07 am)
சேர்த்தது : MURUGAN
பார்வை : 57
மேலே