பொங்கல் வாழ்த்துக்கள்

கழியும் மார்கழியில்
கவலைகள் எல்லாம்
கறைய,

தன்நம்பிக்கை கொண்டு வரும்
தை (தை மாதம்) அதில்
தைரியங்கள் விளைய,

அதிகாலை விழிதிறக்கும்
ஆதவன் (ஆண்டவன்) பார்வையில்
அகிலம் எல்லாம்
ஒளி பெருக,

வாசலில் போடும்
வண்ணக் கோலம் போல
மனிதனின் எண்ணங்கள்
அழகாக மாற,

இதுவரை
மனிதன் பாதம் தாங்கிய
மண் இன்று
மண்பானையைத் தாங்க,

குயவர் தோழர் கைப்பட்ட
மண்பானையில்
மனம் முழுவதும் மகிழ்ந்து,

உழவர் தோழர்
உழைப்பில் உருவான
"அரிசியில் (பச்சரிசியில்)
அன்பு கலந்து,

பார்வைக்கு எட்டாத
மஞ்சள் கிழங்கு
இன்று பானையை பாதுகாக்க,

முக்கனி அதில்
முதல் கனி கொண்ட
மாமர கிளை ஒன்று
கீழும் மேலும்
பொங்கல் பானையை தழுவ,

பசுவின் பாசம் கலந்த
பாலின் வழியே
பண்பாடு வழிய,

பனைவெல்லம் பட்ட
இன்பமென்றும்!
தித்திக்கும் திருநாள் என்றும்!!
இவ்வுலகமெங்கும் வரவேற்க
இனிதே வழியட்டும்
இன்பம் பொங்கும் பொங்கல்...!!!(தை திருநாளில் எழுத்து இணையம்
உறவுகளின் உள்ளங்களில்
இன்பம் பொங்க

-- செந்தமிழ் பிரியனின் --
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்)

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (13-Jan-18, 7:23 pm)
Tanglish : pongal vaalthukkal
பார்வை : 204

மேலே