தைப்பொங்கல்

மண் மணக்கும், மனம் மகிழும்
ஈடு இல்லா சொல்லெடுத்து
வாழ்த்துகின்ற பொன்னாளாம்
இத் தைத் திருநாள்

இதுவன்றோ உலகத்தின்
தலை சிறந்த திருநாள்
வாடுகின்ற வயிறெல்லாம்
சோறுண்டு தினையுண்டு
சொல்லவொண்ணா பசி நீங்கி
ஆறி நிற்க

ஆனந்தம் கொண்டு
பூத்து நிற்கும் புன்னகையில்
மிதந்து வரும் இந்நாளை
போற்றிடுவோம் புத்தரிசி பொங்கலுடன்

விவசாயம் வித்திட்ட விவசாயி
வேண்டும் மனஉறுதியுடன்
உடல் வலிமையுடன் வேண்டும் வேண்டும்
நாம் எந்நாளும் அவன் நாமம்
போற்றிட வேண்டும்

களங்கமில்லா எண்ணமுடன்
சேறுகண்டு செப்பனிட்டு
களமிறங்கி விதை விதைத்து
பருவமதில் பயிர் கண்டு
மணிமணியாய் கதிர் கொய்து
பதம் பார்த்து உணவு தரும்
உத்தமனாம் உழவனை நாம்
ஊழியுள்ள காலமெல்லாம்
வாழ்த்தி நிற்போம் போற்றி நிற்போம்

தலை சிறந்த தைத்திருநாள்
தாரணியில் தவழ்ந்து வர
யாம் செய்யும் நன்றி
வாழ்த்துக்கள் பல மனம் நிறைந்து கூறுவதே
நாம் மனம் நிறையும் போது
ஒவ்வொரு விவசாயியும்
உள்ளம் களிகொள்ளுவான்
அவன் நெஞ்சம் நம் மஞ்சம்
வாழ்க தைப்பொங்கல் வளர்க புத்தாண்டு

எழுதியவர் : பாத்திமாமலர் (14-Jan-18, 2:36 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 97

மேலே