ஜல்லிக்கட்டு vs மல்லுக்கட்டு

சிரிப்போம்! சிந்திப்போம்!

மனிதனை மனிதன் அடக்கும் மல்லுக்கட்டுப் போட்டி!...

அட! ரொம்ப நல்லா இருக்குங்கண்ணே!
இது எப்போ அறிமுகம்?

தமிழ்நாட்டுல அறிமுகம் ஆகல தம்பி.

மாட்டை அடக்குனா சல்லிக்கட்டு தமிழர் வீரம். இந்த மல்லுக்கட்டு எதற்குங்கண்ணே?

தம்பி சொல்றேன் கேளு.
மனிதனின் அளவுக்கு மாடு யோசிக்காது.
ஒரு குறிப்பிட முறையில் அதை கையாண்டால் அடக்கிவிடலாம்.
அதே போலத் தான் இந்த மல்லுக்கட்டும்...

மாட்டிடம் கூரான, பயங்கரமான கொம்பு இருக்குங்கண்ணே!

மனிதன் கிட்ட பார்க்க முடிய பயங்கரமான ஆயுதம் இருக்கு தம்பி!
அது தான் மூளை!

இந்த மல்லுக்கட்டு எப்படி எந்த அளவுக்கு பயனுதாக இருக்குங்கண்ணே!?

மனிதர்களில் வலுவுள்ள இருவருக்கிடையே நடக்கும் பலப்பரீட்சை.
ஆயுதங்கள் உபயோகம் கூடாது.
உடல் பலம் மற்றும் சண்டை யுக்திகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அப்படி சண்டை ஆட்களுக்கு பஞ்சம் அண்ணே! இதில் பந்தயம் கட்டி சண்டை போடுபவர்கள் ஏமாற்றும் வாய்ப்பு உள்ளதுங்கண்ணே!

ஆமா தம்பி. எதை எடுத்தாலும் ஊழல் பண்ற முட்டாள்கள் தான். வீரக்கலை தன்னிலும் ஏமாற்றுவார்கள்..

அப்போ நாம அமைதியா இருப்போம்.

ம்ம். மல்லுக்கட்டு பழைமையான கலையும் கூட. சொன்னா கேட்பாங்களா?

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (16-Jan-18, 9:43 am)
பார்வை : 114

சிறந்த நகைச்சுவைகள்

மேலே