தேசபக்தியும், மனிதநேயமும் - தொடர்ச்சி10

காவல் துறை வாகனம் காலையிலேயே ஊருக்குள் வந்து வீட்டின் முன் நின்றது.
காக்கி சட்டைகள் வீட்டினுள் புகுந்தன.

சிவா வீட்டில் இல்லை.
சிவா மாதிரி இருந்த அசோக்கை இழுத்து வந்தார்கள்.

" அவனை எதுக்குச் சார் இழுத்துப் போறீங்க? ",என்று சுப்புராஜ் கேட்க, " கட்சித்தலைவனை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி செய்தவனை இழுத்துட்ட போகாமல் மாலை போட்டு மரியாதை செய்யவா? ",என்று கூறிவிட்டு வெளியேறினார் இன்ஸ்பெக்டர் இராமர்.

அக்கம் பக்கம் வேடிக்கை பார்க்க அசோக் காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டு, வாகனம் கிளம்பிச் சென்றது.

கஸ்தூரி அம்மாவும், சித்ராவும் கோவிலுக்குப் போயிருந்ததால் அவர்கள் வீட்டில் இல்லை.

அசோக்கைப் போலீஸார் கைது செய்ததைக் கண்ட சிவாவின் நண்பன் வேலுச்சாமி சிவாவிற்கு கால் பண்ணி சொன்னன்.

சேதி கேட்டு காவல் நிலையம் நோக்கி விரைந்தான் சிவா.
வழியில் ஏ.சி.ஜெகனைச் சந்தித்து கேட்டார்.
அசோக்கைக் கைது செய்தது குறித்து ஜெகனுக்கு எதுவும் தெரியவில்லை.

ஜெகன் விசாரித்ததில் புதியதாக வந்த இன்ஸ்பெக்டர் இராமனின் அதிரடி நடவடிக்கையென்றும் அதில் மேலிட தலையிடு இருப்பதாகவும், சிவாவைப் பிடித்து லாகப்பில் வைத்து அடித்துக் கொல்லத் திட்டம் தீட்டப்பட்டதும் வெளிப்பட்டது.

ஜெகன் சிவாவிடம், " சீக்கிரம் போய் உன் தம்பியைக் காப்பாற்று. ",என்று விரைந்து சொல்லுமாறு காவல்நிலைய முகவரியைக் கொடுத்தார்.

அங்கு அசோக்கை அடித்துக் கொண்டு இருந்தார்கள்.

சிவா கோபத்தில் அங்கிருந்தவர்களைத் தாக்கினான். அடி ஒவ்வொன்றும் திகிடுமுகிடாக விழுந்தநு.
அசோக்கை மீட்டான்.
குற்றவாளிக்கு சாதகமாக லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டருக்கு வர்ம அடியால் அப்பு வைத்தான்.

ஜெகன் வந்தார்.
அசோக்கை அழைத்துச் செல்லும் படி சிவாவிடம் கூறினார்.
அசோக்கை அழைத்துக் கொண்டு சிவா தன் வீட்டிற்குச் சென்றான்.
எல்லாரும் கூடியிருந்தார்கள்.

அங்கு பதறி இருந்த கஸ்தூரி அம்மா, " என் மகனுக்கு என்னாச்சு? ",என்று அழுதிட, " அந்த போலீஸ்காரங்க நல்லா இருப்பாங்களா? திருப்பி அடிக்க மாட்டானு தெரிஞ்சதும் இப்படி அடிச்சுக் காயப்படுத்தி இருக்காங்களே. ", என்று சித்ரா கோபப்பட்டாள்.

" போலீஸை ஏம்மா திட்டுற. பாவி இவன் இருக்கானே! இவன் ஒருத்தனே போதும். ",என்று சிவாவைத் திட்டினார் சுப்புராஜ்.

" அண்ணனைத் திட்டாதீங்கப்பா. ",என்றான் அசோக் சற்று தடுமாறியபடி..

" ஆமாடா! பெரிய அண்ணன். உன்னுடைய இந்த நிலைக்குக் காரணமே அவன் தான்டா. இன்னும் ஏன்டா இங்கே நிக்குற. போடா வெளியே. எங்களுக்கு ஒரு மகனே போதும். ",என்று கதறினார் கஸ்தூரி அம்மா.

தம்பியை பார்த்தான் சிவா.
வீட்டைவிட்டு வெளியேறிவிட்டான்.
காலணிகளை அணியவில்லை.
இருசக்கர வாகனத்தையும் எடுக்கவில்லை.

கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு புன்னகையை வரவழைத்துக் கொண்டு நடந்தான் சிவா.
நடந்தவனைப் பின் தொடர்ந்தாள் நந்தினி.

பேரூந்து நிறுத்ததில் வந்து அங்கிருந்த குத்துக்கலில் அமர்ந்தான் சிவா.

நந்தினி வந்தாள்.

" ஏய்! அவங்க பேசுனதையெல்லாம் பெரிசா எடுத்துக் கிடாத. ",என்றாள் நந்தினி.

மௌனமாக இருந்தான் சிவா.

பதிலுக்குக் காத்திருந்து சலிப்படைந்த நந்தினி,
" அப்போ நீ எங்களை விட்டு போகப் போறியா? ",என்றாள்.

" ஆம். ",என்றான் சிவா.

" ஏன்? நீ இங்கேயே இருக்கக் கூடாதா? "

" இதுவரை அப்பா தான் திட்டி இருக்காங்க. அம்மா திட்டியதில்லை. ஆனால், இப்போ அவர்கள் பேசியதை நீயே கேட்டாயல்லவா? "

" அசோக் அடிபட்டதால அப்படி பேசிட்டாங்க. சரி, விடு. "

" நான் இங்கேயே இருந்தால் அசோக்கு அபத்துனு அப்பா அம்மா நினைக்கிறாங்க. அதுமட்டுமல்ல நான் இங்கிருந்து விலகி இருந்தால் தான் என் தம்பியோட தைரியமும் வீரமும் வெளிப்படும். "

" நீயேன் பிரிவைப் பற்றியே சிந்திக்கிற. "

" பிரிவும், உறவும் நிரந்தரமில்லாதது. "

" அப்படினா, நீ என்னையும் பிரிய நினைக்கிறாய். "

" என் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா? "

" நம்பிக்கை இருக்கு. "

" அப்போ காத்திரு. "

" என்னால் தினமும் உன்னைப் பார்க்காமல் இருக்க முடியாது. "

" அப்போ என்னை மறந்துட்டு வேலையைப் பாரு. "

" என்னடா பேசுற! ",என்று செவிட்டில் ஓங்கி அறைந்தாள் நந்தினி.

சற்று மௌனம் நிலவியது.

" நீ இல்லாமல் என்னால இருக்க முடியாது. "

நந்தினி அழுதே விட்டாள்.

" உன்னை அழைத்துச் செல்ல என் மனம் ஒப்பவில்லை.
நீ வீட்டுக்குப் போ. ",
என்றான் சிவா.

அப்படியே நின்றிருந்தாள் நந்தினி.
சிறிது நேரம் கழித்து கிளம்பினான்.

" ஹேய்! நில்லு. ",என்றான் சிவா.

நின்றவள் என்னவென்று கேட்க, " என் தங்கையிடம் சொல்லு, அசோக் பேச்சைக் கேட்டு நடக்கவேண்டுமென்று.
என் தம்பியிடம் சொல்லு, எப்போது தைரியமாக இருக்க வேண்டும், வலியவனிடத்தில் வலியவனாய் இருப்பது தவறில்லையென்று.
அதோடு என் புத்தகப் பெட்டிச் சாவியை அவனிடம் ஒப்படைத்துவிடு. ", என்று கூறினான் சிவா.

" சரி. ",என்று வாங்கிக் கொண்டு நகர்ந்தாள் நத்தினி.

சிறிது நேரத்தில் ஜெகன் பைக்கில் வந்தார்.
சிவாவைக் கண்டு நிறுத்த பைக்கில் சிவா ஏறிக் கொள்ள, இருசக்கர வாகனம் விரைந்தது.

ஜெகன் சிவாவை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
காலீங் பெல்லை அடித்தார்.
கதவைத் திறந்தார் கனகராஜ்.

" வாங்க மாப்பிள! ",என்று ஜெகனை அழைத்த கனகராஜ், " இது? ",என்று சிவாவைப் பற்றிக் கேட்டார் ஜெகனிடம்.

" எனது நண்பர் சிவா. நான் கூட சொல்லி இருக்கேனே! ",என்றார் கனகராஜ்.

" ஓ! அவரா! வாங்க தம்பி. ",என்று உள்ளே அழைத்துச் சென்றார் கனகராஜ்.

குடும்பத்தில் மற்றவர்களுடன் சிவாவை அறிமுகப்படுத்தி வைத்தார் ஜெகன்.

சிவாவின் வசீகரமான முகத்தைக் கண்டு ஜெகனின் பிள்ளைகள் தமிழ்செல்வியும், தமிழ்செல்வனும் புன்னகைத்தனர்.
சிவாவும் புன்னகைத்தான்.

ஜெனிபர், " உணவு ரெடி. எல்லாரும் சாப்பிட வாங்க. ",என்று அழைத்தார்.
சிவாவையும் அழைத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தார்கள் சாப்பாட்டு மேசையில்..

உணவு பரிமாறப்பட்டது.
சிவா சாப்பிட சற்று தயங்கினான்.

" சாப்பிடுங்க தம்பி. இதுவும் உங்க வீடுதான். ",என்றார் ஜெனிபர்.
புன்னகைத்துவிட்டு சாப்பிட்டான் சிவா...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (16-Jan-18, 7:31 pm)
பார்வை : 117

மேலே