தேர்வு வாழ்த்து
தொல்லை தரும் தொலைக்காட்சி தொலைவில் இருக்கட்டும் ,
இரவு பொழுது , பகலில் உறங்கும் முன் உன்னை எழுப்பட்டும்,
உறங்கும் இரவில் உன் கனவுகள் உயர்வாக எண்ணட்டும்,
கடந்த கால தோல்விகள் உன்னை தட்டி எழுப்பட்டும் ,
படித்தவைகள் அனைத்தும் பசுமரத்தாணி போல மனதில் பதியட்டும் ,
உன் பதற்றங்கள் அனைத்தும் தவிடுபொடியாகட்டும்,
உன்னை சுமந்த வயிற்றில் ,உன்னால் இந்த தேர்வின் வெற்றி ,பாலை வார்கட்டும் ,
ஐந்தில் ,உனக்காக வளைந்த உன் தகப்பனின் முதுகுகள் உன்னால் நிமிரட்டும்
இதை நீ கேட்க மறுத்தால் ,
நாளை இந்த உலகம் உன்னை மறுக்கட்டும் ,