கண்ணன்

அழகான புன்னகை கண்டேன்
ஒளி வீசும் கண்கள் கண்டேன்
மனம் மயக்கும் தோற்றம் கண்டேன்
பஞ்சு போன்ற மென்மை கண்டேன்
தேன் போன்ற சுவையும் கண்டேன்
மதி மயங்கும் வாசம் கண்டேன்
என் சுயம் இழக்க கண்டேன்
உன் வசம் வீழ கண்டேன்
கண்ணனை எண்ணி வந்தேன்
கள்வன் என்றே கண்டு கொண்டேன்
சத்தமில்லா திருட்டை கண்டேன்
சந்தோசமாய் திருட கொடுத்தேன்
மனசை திருடி விட்டான்
மகிழ்ச்சியை கொடுத்து விட்டான் கண்ணன்

எழுதியவர் : ஸ்ரீமதி (20-Jan-18, 12:52 pm)
Tanglish : Kannan
பார்வை : 1285

மேலே